நாம் தமிழர் கட்சி சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பனை ஓலை வினியோகம்
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பனை ஓலைகளை வியாபாரிகளுக்கு வழங்கி அதில் இறைச்சி உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம்,
கடந்த 1-ந் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இந்த தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் நடவடிக்கையின் காரணமாக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு துணிப்பைகள், பாத்திரங்கள், பேப்பர் பைகள் முதலியவற்றை கொண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் பிளாஸ்டிக் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதற்கு மாற்றாக இயற்கையான பனை ஓலையில் பொருட்களை வாங்கி செல்வது குறித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் நகரில் அரண்மனை, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளுக்கு சென்று பனை ஓலைகளை மடித்து கொடுத்து அதில் இறைச்சியை கொடுக்குமாறு செய்தனர். இந்த பனை ஓலைகளை ஏராளமான அளவில் கடைகளில் கொடுத்து அதனை எவ்வாறு மடக்கி வைத்து அதில் இறைச்சியை வைத்து கொடுக்க வேண்டும் என்றும் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் நன்மை அளிக்கும் பனை ஓலையில் பொருட்கள் வாங்குவதை புதிய அனுபவமாக எண்ணி பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில், நாம் தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் பத்மநாபன், நகர் பொறுப்பாளர் நாகூர்கனி, செந்தில்குமார், கோபால், வழக்கறிஞர் பாசறை செயலாளர் டேவிட், மாவட்ட பொருளாளர் காயாம்பு, தொகுதி செயலாளர் வெங்குளம்ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் வழிநெடுக மக்களிடம் பனைஓலையில் பொருட்கள் வாங்கி செல்லுமாறு கூறி மக்களுக்கும் பனை ஓலைகளை வினியோகித்தனர்.