‘அச்சம் இல்லாத சமுதாயத்தை மீண்டும் உருவாக்குவது தான் காங்கிரஸ் நோக்கம்’ ப.சிதம்பரம் பேச்சு
அச்சம் இல்லாத சமுதாயத்தை மீண்டும் உருவாக்குவது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என ப.சிதம்பரம் கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மிலாதுநபி மாநாடு சென்னை எழும்பூரில் நடைபெற்றது. மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் பி.ஏ.காஜா முயீனுதீன், வழிகாட்டு குழுவை சேர்ந்த ஜி.எம்.தர்வேஷ், பொதுச்செயலாளர் வி.எஸ்.அன்வர் பாதுஷாஹ், பொருளாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், துணை பொதுச்செயலாளர்கள் ஏ.அப்துல் அஜீஸ், கே.எம்.இலியாஸ், குராஸானீ பீர் மஸ்ஜித் தலைமை இமாம் எம்.சதீதுத்தீன், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், பொருளாளர் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ப.சிதம்பரம் பேசியதாவது:-
இந்தியாவில் இருக்கக்கூடிய மதங்கள் பால் போன்றது. இந்தியாவுக்கு வந்த மதங்கள் சர்க்கரை போன்றது. பாலையும், சர்க்கரையையும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. எல்லா மதங்களும் ஒரே மாதிரியான நெறிகளை தான் சொல்கின்றன.
மத பேதங்கள் சமுதாயத்தை சின்ன பின்னமாக்கி இருக்கின்றன. இதை தான் உண்ண வேண்டும், இந்த நூலை அச்சிடக்கூடாது என்று சொல்கிறார்கள். ஜனநாயகம் தவறானவர்கள் கையில் சிக்கினால் குரங்கு கையில் பூ மாலை சிக்கியது மாதிரி ஆகிவிடும்.
பணமதிப்பு இழப்பு அறிவிப்பு வந்த போது எல்லோரும் தடுமாறினார்கள். இது தவறான முடிவு என்று அப்போது நான் சொன்னேன். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான வழி என்று சொன்னார்கள். பண மதிப்பு இழப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 2 ஆண்டுகள் சரிய வைத்தது.
பல்லாயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு, பல லட்சம் பேர் வேலை இழந்தனர். பணமதிப்பு இழப்பு மோசமான நடவடிக்கை என்று ரகுராம் ராஜன், சர்வதேச நிதி ஆணையத்தில் புதிய பொருளாதார ஆலோசகராக பதவி ஏற்ற கோபிநாத், அமர்தியா சென் ஆகியோர் சொல்லி இருக்கிறார்கள்.
இப்போது எல்லா முடிவும் தனிமனிதன் எடுக்கிறார். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. தனிமனித முடிவு தான். ஜி.எஸ்.டி. 18 சதவீதத்துக்கு மேல் செல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் சொன்னது. அப்போது அதை முட்டாள் தனம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அதை தான் செய்கிறார்கள்.
இஸ்லாம், கிறிஸ்தவம், தலித், மலைவாழ் மக்கள் 2-ம் தர குடிமக்களா?. மீண்டும் அச்சம் இல்லாத சமுதாயத்தை இந்தியாவில் உருவாக்குவது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில், ஜமாஅத்துல் உலமா சபையினர், ப.சிதம்பரத்துக்கு நினைவு பரிசு வழங்கினர்.