‘மராட்டியர் பிரதமர் ஆவார்’ முதல்-மந்திரி பட்னாவிஸ் சொல்கிறார்

நாக்பூரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார்.;

Update: 2019-01-05 22:50 GMT
நாக்பூர்,

நாக்பூரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். அப்போது, இதுவரை மராட்டியத்தில் இருந்து யாரும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2050-ம் ஆண்டிற்குள் ஒரு மராட்டியரையாவது இந்தியா பிரதமராக காணுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “ஏன் இல்லை, நிச்சயமாக நாம் பார்ப்போம். அதற்கான தகுதி மராட்டியர்களிடம் இருக்கிறது. 2050-ம் ஆண்டிற்குள் ஒன்றல்ல, ஒன்றுக்கும் மேற்பட்ட மராட்டியர்கள் நாட்டின் உயரிய பதவியை அலங்கரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்து சமீப நாட்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. நிதின் கட்காரி மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் முதல்-மந்திரியிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்