தனித்தனி சம்பவம் 2 பெண்கள் தூக்குப்போட்டு சாவு
தனித்தனி சம்பவத்தில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.;
திருபுவனை,
திருபுவனை அருகே குச்சிப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி தேவகி (வயது 60), மாற்றுத்திறனாளி. இவர் கால் வலியால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றும், வலி குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தேவகி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வில்லியனூர் மெயின்ரோடு கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 59). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணியின் மூத்த மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் உதவி சப்–இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.