நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.

Update: 2019-01-05 22:00 GMT
பாவூர்சத்திரம், 

நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.

அனுமன் ஜெயந்தி விழா

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் சார்பில் 1008 வடை மாலை சாத்தியும், வெண்ணை சாத்தியும் வழிபாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பனவடலிசத்திரம் அருகே வன்னிக்கோனந்தல் கீழ டானா ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு மூலமந்திர ஜெப ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இசை சொற்பொழிவு, குழந்தைகளின் கோலாட்டம் நடைபெற்றது. இதேபோல் மருக்காலங்குளம், தேவர்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை முன்னிட்டு 603 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் மாலைகளும் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பக்தர்கள் வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு நடத்தினர். பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மூலைக்கரைப்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள ஜெயவீரஸ்தூல ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்