கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு ஆத்தூர் கோர்ட்டு உத்தரவு

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-01-05 22:15 GMT
தலைவாசல், 

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த நத்தக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த 2014-ம் ஆண்டு தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சிவகுமார் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

இவர் தற்போது நீலகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்காக ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜராகுமாறு கோர்ட்டு மூலம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் சம்மனை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சிவ குமார் வழக்கு விசாரணைக்கு அன்றைய தினம் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்