43 தபால் நிலையங்களில் இணைய வங்கிசேவை தஞ்சை கோட்டத்தில்
தஞ்சை கோட்டத்தில் உள்ள 43 தபால் நிலையங்களில் இணைய வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் தபால் துறை சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடிதங்கள், பணப்பட்டுவாடா போன்றவை செயல்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் சிறுசேமிப்பு, விரைவு தபால் சேவை போன்றவையும் செயல்டுத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் ஏ.டி.எம். மையங்கள் மூலம் பணம் எடுக்கும் வசதி, அதனைத்தொடர்ந்து வங்கி சேவையையும் அறிமுகப்படுத்தியது.
இந்த வங்கி சேவை கடந்த அக்டோபர் 1–ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அனைத்து தலைமை தபால் நிலையம், துணை தபால் நிலையங்களில் இந்த வங்கி சேவைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் தபால்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தபால் துறையின் வங்கி சேவை சார்பில் இணைய வங்கி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய வங்கி சேவை கடந்த 1–ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இணையவங்கி சேவை ஏற்கனவே உள்ளது. தற்போது அரசின் தபால்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வங்கிகளிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் தபால் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இணைய வங்கி சேவை மூலம் மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், வங்கிகளுக்கான பண பரிமாற்றம் என அனைத்தும் மேற்கொள்ளலாம். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதற்கான விண்ணப்பங்கள் தபால் துறையில் உள்ளன. அந்த விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் 24 மணி நேரத்தில் இணைய வங்கி சேவையை பெறலாம். பூர்த்தி செய்யும் போது கைவிரல் ரேகையையும் பதிவுசெய்ய வேண்டும்.
இதற்காக செல்போன் நம்பர், வாடிக்கையாளரின் தாயார் பெயர், ஆதார் எண், இ–மெயில் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். பணப்பரிமாற்றம் செய்யும்போது உடனடியாக இ–மெயில் முகவரிக்கு தகவல் வந்து விடும்.
தஞ்சை தபால்துறை கோட்டத்தில் தஞ்சை, பாபநாசம், மன்னார்குடி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு தஞ்சை தலைமை தபால் நிலையம் மற்றும் 42 துணை தபால் நிலையங்கள் உள்ளன. இந்த 43 இடங்களிலும் இந்த இணைய வங்கி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இது குறித்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.