ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடியில் நவீன ஆய்வு மையம் 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.6½ கோடியில் அமைக்கப்பட்டு உள்ள நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு மையத்தை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.
பிராட்வே,
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள நுண்கதிரியல் துறையில் ரூ.6 கோடியே 53 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு மையம் (‘கேத்லேப்’) திறக்கப்பட்டது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நவீன ஆய்வு மையத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, கோவை அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றை தொடர்ந்து 4-வதாக இந்த ஆய்வு மையம் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையத்தில் 3 டாக்டர்கள், 3 நர்சுகள், 3 தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இங்கு ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகள், வீக்கம், கசிவு, ரத்த குழாய் வெடிப்பு போன்றவற்றை கண்டறிந்து நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம்.
மாரடைப்பு நோயாளிகளுக்கு செய்யப்படும் ‘ஆன்ஜியோ பிளாஸ்ட்’, ‘ஸ்டெண்ட்’ மற்றும் பக்கவாத நோயாளிக்கு ரத்த குழாய்களில் அடைப்பை நீக்குதல் மற்றும் கரைத்தல், கல்லீரல் புற்றுநோயாளிகளுக்கும் இந்த ஆய்வு மையத்தில் சிகிச்சை அளிக்கலாம்.
பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கர்ப்ப பையை எடுக்காமலே இங்கு சிகிச்சை செய்து ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம். விழுப்புரம், தர்மபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை ஆகிய மேலும் 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த நவீன ஆய்வு மையம் ரூ.21 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இதில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம், நிலைய அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.