ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர், இந்திரா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி (வயது 36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். அசோக்குமாருடன் மகனும், பார்வதியுடன் மகளும் வசித்து வந்தனர்.
பார்வதி செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்று மகளை வளர்த்து வந்தார். மேலும், குடும்ப செலவை எதிர்கொள்ள பலரிடம் பணம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் பார்வதி கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
கடன் தொல்லையால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பார்வதி சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு வேலைக்கு சென்றார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.