செம்பூரில் துப்பாக்கியால் சுட்டு கட்டுமான அதிபர் தற்கொலை
செம்பூரில் துப்பாக்கியால் சுட்டு கட்டுமான அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
செம்பூரில் துப்பாக்கியால் சுட்டு கட்டுமான அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கட்டுமான அதிபர்
மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் அகர்வால் (வயது57). இவர் சிந்தி காலனியில் சஞ்ஜோனா என்ற கட்டுமான நிறுவனத்தின் அதிபராக இருந்து வந்தார். நேற்று காலை 11.25 மணி அளவில் அவர் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அவரது அறையில் இருந்து திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.
இதனை கேட்ட அவரது உறவினர் மற்றும் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். இதில் சஞ்சய் அகர்வால் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது.
தற்கொலை
இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த செம்பூர் போலீசார் கட்டுமான அதிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சஞ்சய் அகர்வால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
சஞ்சய் அகர்வால் செம்பூரில் ஒரு கட்டுமான திட்டத்தை தொடங்கி இருந்தார். ஆனால் அதன் பணிகள் தாமதமாகி வந்ததால் அவர் அண்மைகாலமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.