கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சம்மேளனம் வாயிற்கூட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் வாயிற் கூட்டம் நடத்தினர்;

Update: 2019-01-03 21:30 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட பெருந்தலைவர் காமராஜர் அரசு அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சம்மேளன தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் கவுரவ தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் முத்தமிழ் குணாளன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், 1.1.2004-க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட மற்றும் பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நீக்க வேண்டும்.

உள்ளாட்சி மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் வருகிற 8,9-ந்தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது என்று அரசு ஊழியர்கள் சம்மேளன தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்