காரியாபட்டியில் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து கிராமிய இசை மூலம் விழிப்புணர்வு

காரியாபட்டியில் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து கிராமிய இசை கலைக்குழுவினர் நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2019-01-03 22:45 GMT
காரியாபட்டி,

காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு ‘மாங்குயிலே பூங்குயிலே’ கலைக்குழு மற்றும் காவல் துறை இணைந்து இயற்கை சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் முயற்சியாக கிராமிய இசை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.எம் மருத்துவமனை நிறுவனர் அழகர்சாமி தலைமை தாங்கினார். காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் முன்னிலை வகித்தார்.

கலைக்குழுவின் நிறுவனர் டாக்டர் தனலெட்சுமி சேவுகன் வரவேற்றார். கிராமிய நாட்டுப்புற இசைக்கலைக் குழுவினர் பிளாஸ்டிக் தடை பற்றி பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் துணிப்பைகளை வழங்கி எடுத்துக் கூறினார்.

பொதுமக்களும் பிளாஸ்டிக்கின் தீமைகளை உணர்ந்து டீக்கடைகளில் சில்வர் பாத்திரங்களில் பார்சல் வாங்குகின்றனர். இறைச்சி கடைகளில் வாழை இலைகளில் மடித்தும், சில்வர் பாத்திரங்களிலும் இறைச்சி வழங்குகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாகிட அனைவரும் பாடுபட வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் கூறினார்.

நிகழ்ச்சியில் அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் அருண் குமார் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்