ஆதிச்சனூரில் கையகப்படுத்திய இடத்தை திரும்ப வழங்கக்கோரி சாலை மறியல்
ஆதிச்சனூரில் கையகப்படுத்திய இடத்தை திரும்ப வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் அரசு சார்பில் கடந்த 2007-ம் ஆண்டு 2 நபர்களிடம் இருந்து 2 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, 64 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்கியது.
அப்போது எங்களுக்கு தெரியாமலேயே எங்களது நிலத்தினை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதனை ஏற்கமாட்டோம், எனவே எங்களது இடத்தை எங்களுக்கு திரும்ப தர வேண்டும் என நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து தர அலுவலர்களுக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த மாதம் இடத்தை அளவீடு செய்து 12 பேருக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் அளவீடு பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது அனைவருக்கும் இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என ஆதிதிராவிட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் 12 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட குடிசைகளை நிலத்தின் உரிமையாளர்கள் கடந்த 1-ந் தேதி பிரித்தனர். அப்போதும், அனைவருக்கும் இலவச வீட்டு மனைபட்டாக்களை அளவீடு செய்து தரவேண்டும் என ஆதிதிராவிட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் நிலத்தை அரசு எப்படி கையகப்படுத்தலாம் என்றும், கையகப்படுத்திய இடத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது உறவினர்களுடன் ஆதிச்சனூர் பஸ் நிறுத்தம் அருகே தா.பழூர்-விளாங்குடி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொடர்ந்து இருதரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படவாய்ப்பு உள்ளது. எனவே, இந்த இடப்பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை இருதரப்பை சேர்ந்த யாரும் அந்த இடத்துக்கு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் தா.பழூர்-விளாங்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.