ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை

நெல்லையில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கட்டிட தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-01-03 21:30 GMT
நெல்லை,

நெல்லையில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கட்டிட தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கட்டிட தொழிலாளி

நெல்லை மேலப்பாளையம் சித்திக் நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் சேக்முகமது (வயது 17). கட்டிட தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்தார். இதில் சேக்முகமதுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய பின்னரும் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அவரை பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டின் குளியறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர்

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் சங்கரன் (24). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். புத்தாண்டு விடுமுறையையொட்டி ஊருக்கு வந்து இருந்தார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்தவர் அடைக்கலம் (70). இவர் மனைவியை பிரிந்து பாளையங்கோட்டை நூற்றாண்டு முன்பு உள்ள ஒரு கோவிலில் தங்கி இருந்தார். அந்த பகுதியில் செல்பவர்களிடம் தர்மம் எடுத்து வாழ்க்கையை நடத்தி கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவர் அந்த கோவிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்