எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

Update: 2019-01-03 22:30 GMT
எருமப்பட்டி, 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எருமப்பட்டியில் கடந்த ஆண்டு மே மாதம் 26-ந் தேதி ஜல்லிக்கட்டை எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அதிகாரிகளுடன் இணைந்து நடத்தி உள்ளோம்.

அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். எனவே அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந் தேதி எருமப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்