ஆவடியில் 550 பேருக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்

ஆவடி பகுதியில் நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் நிகழ்ச்சி பட்டாபிராமில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

Update: 2019-01-03 22:00 GMT
ஆவடி,

இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வரும் 550 பேருக்கு ரூ.273 கோடியே 35 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாவையும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் ஆவடி மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த 43 பேருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கலெக்டர் ரத்னா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் அப்துல்ரகீம், தனி தாசில்தார் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்