புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கஜா புயல் பாதிப்பால் வீட்டை முழுமையாக இழந்தவர் களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். பாதி இடிந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 150 நாட்களாக வேலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சுழற்சி முறை இல்லாமல் தினமும் வேலை வழங்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில விவசாய சங்க பொது செயலாளர் நடராஜன், சலோமி உள்பட பலர் கலந்துகொண்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டம் மாலை வரை தொடர்ந்து நீடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.