மும்பை, தானேயில் புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 3,171 பேர் சிக்கினர்

மும்பை, தானேயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 3,171 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2019-01-01 23:15 GMT
மும்பை, 

மும்பை, தானேயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 3,171 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

மும்பையில் 2019 புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் ஆட்டம், பாட்டம் போட்டு மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துகள் அரங்கேறின. மது குடித்துவிட்டு புத்தாண்டு கொண்டாடியவர்கள் போதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துகள் ஏற்படுத்துவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள்.

மும்பையில் ஆங்காங்கே வாகன சோதனை நடந்தது. இதில் மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டியவர்களை கண்டுபிடிக்க கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

போலீஸ் சோதனை

இந்த சோதனையில், மது குடித்து விட்டு கார், மோட்டார் சைக்கிள்கள் ஓட்டியதாக 455 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக 1,114 பேரும், மேலும் பல்வேறு சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 9,121 பேரும் சிக்கியதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.இதுபோல தானேயில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 2,716 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்