ஊராட்சி பணியாளர் சங்க மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்க வேண்டும்
ஊராட்சி பணியாளர் சங்க மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 2,500 பேர் பங்கேற்க வேண்டும் என்று, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு,
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காடு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்பாஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் பணியாற்றிவரும் 12,524 கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவு எழுத்தர் நிலை ஊதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, வருகிற பிப்ரவரி 16-ந்தேதி நடைபெற உள்ள ஊராட்சி பணியாளர் சங்க மாநாட்டில் தஞ்சை மாவட்டத்திலிருந்து சுமார் 2500 பேர் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவராக ராஜீவ்காந்தி, மாவட்ட செயலாளராக ஒரத்தநாடு எம்.இளங்கோவன், மாவட்ட பொருளாளராக ராமதாஸ் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கோபிநாதனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.