ஊத்துக்குளி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து மடிக்கணினி, பணம் திருட்டு
ஊத்துக்குளி அருகே 3 கடைகளின் பூட்டை உடைத்து மடிக்கணினி மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
ஊத்துக்குளி,
ஊத்துக்குளியை அடுத்த பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 46). இவர் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்த ஸ்டூடியோவையொட்டி பேன்சி ஸ்டோரும், மகளிர் தையல் கடையும் அடுத்தடுத்து உள்ளது. பேன்சி ஸ்டோரை பெரியபாளையம் பகுதியை சேர்ந்த சர்வேஸ்வரனும் (42), தையல் கடையை அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வியும் (32) நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 3 பேரும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றபோது 3 கடை கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இவர்கள் கடைக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது கடைக்குள் பொருட்கள் சிதறிக்கிடந்தன. துரைராஜ் நடத்திவந்த ஸ்டூடியோவின் கல்லாவில் இருந்த பணம் ரூ.3,000, சர்வேஸ்வரன் நடத்திவந்த பேன்சி ஸ்டோரில் இருந்த மடிக்கணினி மற்றும் பொருட்கள், அதேபோல் கலைச்செல்வி நடத்திவந்த மகளிர் தையலகம் கடையில் இருந்த துணிகள் மற்றும் பணம் ரூ.3,000 ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து 3 பேரும் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் விசாரணை நடத்தி வருகின்றார்.