சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது கல்லூரி மாணவர்களின் மாதிரி நாடாளுமன்ற கூட்டம்

சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களின் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விவாதம் செய்தனர்.

Update: 2018-12-31 22:46 GMT
சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, கல்வித்துறை இணைந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. இந்த மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தை முன்னாள் எம்.பி.யும், தற்போதைய எம்.எல்.சி.யுமான ஆயனூர் மஞ்சுநாத் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தில், மாணவ-மாணவிகள் எம்.பி.க்களாகவும், சபாநாயகராகவும் இருந்து சபையை நடத்தினார்கள்.

அப்போது மாணவ-மாணவிகள் நாடாளுமன்றத்தில் நடப்பது போன்று விவாதம் நடத்தினார்கள். அந்த சமயத்தில் விவாதம் நடக்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுைகயிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நாடாளுமன்ற கூட்டத்தில் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இந்த மாதிரி நாடாளுமன்ற கூட்டம் விறு, விறுப்பாக நடந்தது. மாணவ-மாணவிகள் எம்.பி.க்களாக மாறி, விவாதம் நடத்தினார்கள். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி இரு பிரிவாக மாணவ-மாணவிகள் பிரிந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தை அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்