நெல்லையில் முதலீட்டாளர்கள் கூட்டம்: 88 நிறுவனங்களுடன் ரூ.421 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ராஜலட்சுமி தகவல்
நெல்லையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 88 நிறுவனங் களுடன் ரூ.421 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
நெல்லையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழக ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு, தொழில் முனைவோருக்கு ரூ.421 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.
கூட்டத்தில், அமைச்சர் ராஜலட்சுமி பேசும் போது கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொலை நோக்கு பார்வை 2023-ன்படி, தமிழகம் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக மாற்று வதற்கு தேவையான அடிப் படை உட்கட்டமைப்பு வசதி கள் ஏற்படுத்தப்பட்டன. இதையொட்டி தமிழகத்தில் எண்ணற்ற தொழில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில், தொழில் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. முதல் தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத் தில் இந்த ஆண்டில் 34 பேருக்கு ரூ.3.40 கோடி மானியம் வழங்கப்பட்டுள் ளது. முதலீட்டாளர் மாநாட்டு க்கு ரூ.32,120 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு ரூ.500 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் தற்போது வரை 88 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.421 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள் ளன. மீதமுள்ள தொழில் முதலீடு இலக்கை விரைவில் எட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், சென்னை தொழில் நுட்ப துணை இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேஷ், திட்ட மேலாளர் கணேசன் மற்றும் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.