சோழவரம் ஏரி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை நண்பர்கள் உள்பட 12 பேரிடம் விசாரணை
சோழவரம் ஏரி அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் உள்பட 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்,
சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி கக்கன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 24). பிரபல ரவுடி. இவர் மீது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், சென்னை எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது.
மேலும், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளன.
இவர் 29-ந் தேதி மாலை நண்பர்களுடன் வெளியே சென்றார். அதன்பின்பு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சோழவரம் ஏரிக்கரை அருகே திவாகர், தலை, முகம், கை, கால்கள் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார்.
ஏரிக்கு மீன்பிடிக்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நேற்று முன்தினம் மாலை ஏரிக்கரையில் வாலிபர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திவாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த அவரது நண்பர்கள் உள்பட 12 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.