தீ விபத்துகள் குறித்து நீதி விசாரணை சஞ்சய் நிருபம் வலியுறுத்தல்

மும்பையில் தொடரும் தீ விபத்துகள் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று சஞ்சய் நிருபம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-12-30 23:47 GMT
மும்பை,

மும்பை நகரில் சமீப காலமாக தீவிபத்து தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை செம்பூரில் 16 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கூட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தொடரும் தீவிபத்து சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செம்பூரில் 5 பேரின் உயிரிழப்புக்கு காரணமான அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில், தீத்தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்ப டவில்லை என்பதும், கட்டிடத்தின் உரிமையாளர் தீயணைப்புத் துறையிடம் உரிய சான்றிதழ் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 நாட்களில் நிகழ்ந்த தீ விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். இது தொடர்பாக, நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தினந்தோறும் நடக்கும் தீ விபத்துகளுக்கு மக்கள் உயிரை இழந்து வருகின்றனர். ஆனால், மாநகராட்சி ஆணையர் அஜய் மேத்தா, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

இதேபோல், மும்பை மாநகராட்சியை ஆளும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணியும், மும்பை நகர மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

தொடரும் தீ விபத்துகளுக்கு மாநகராட்சியின் அலட்சியமே காரணமாகும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கமலா மில் வளாகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந் தனர். அதன்பிறகும், மாநக ராட்சி நிர்வாகம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மும்பை நகரில் தீ விபத்துகள் காரணமாக தினந்தோறும் 2 பேர் உயிரிழப்பது சாதாரண விஷயமல்ல.

நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப, உடனடியாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்