புத்தாண்டையொட்டி, இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரெயில் சேைவ நீட்டிப்பு
புத்தாண்டையொட்டி இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் இன்று(திங்கட்கிழமை) புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இங்கு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புத்தாண்டை வரவேற்கவுள்ளனர்.
பொதுமக்களின் வசதிக்காக பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் மெட்ரோ ரெயில்கள் இன்று நள்ளிரவு 2 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மெட்ரோ ரெயில்கள் இரவு 11 மணிக்கு சேைவயை நிறுத்திக்கொள்ளும்.
இன்று இரவு புத்தாண்டையொட்டி 11 மணிக்கு மேல் 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் வீதம் இயக்கப்பட உள்ளது. இதில் டிரினிட்டி சர்க்கிள், எம்.ஜி.ரோடு, கப்பன் பார்க் ஆகிய நிலையங்களுக்கு வருபவர்களுக்கு பயண கட்டணம் ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணியில் இருந்து பயண டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. இரவு 11 மணிக்கு மேல் இந்த டோக்கன் வழங்கப்பட மாட்டாது. அதற்கு முன்னதாகவே டோக்கனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ‘ஸ்மார்ட் கார்டு’ மூலமாகவும் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.