பிளாஸ்டிக் பொருட்கள் தடையை தொடர்ந்து துணிப்பை தயாரிக்கும் பணி தீவிரம்
பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து புதுக்கோட்டையில் துணிப்பை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை,
தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடைவிதித்து உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், உணவு பாதுகாப்புத்துறை, உயர்கல்வித்துறை, தொழிற்சாலைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் தினசரி அதிகமான பைகள் பயன்படுத்தக்கூடிய கடைகளான துணிக்கடை, உணவகம் உள்ளிட்ட வணிகர்கள் பிளாஸ்டிக் அல்லாத பைகளை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மூலம் துணிப்பை தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துணிப்பை தயாரிக்கும் பணி
இந்நிலையில் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள தையல் கடையில் ஆடை தைக்கும் பணியை விட்டுவிட்டு துணிப்பை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தையல் கடைகாரர் முருகேசன் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக 15 தையல் எந்திரங்களையும், தொழிலாளர்களை கொண்டு ஆடை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக ஆடை தைப்பதற்கு அவ்வளவாக வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளதை தொடர்ந்து உணவக உரிமையாளர்கள் 3 ஆயிரம் துணிப்பை தைத்து கொடுக்க ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக ஆடை தைப்பதை நிறுத்திவிட்டு துணிப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். ஒரு துணிப்பை ரூ.9 மதிப்பில் தயாரித்து வருகிறோம் என்றார்.