முயல்களை வேட்டையாடி விற்க முயற்சி; 4 பேர் கைது

முயல்களை வேட்டையாடி விற்க முயன்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2018-12-30 21:45 GMT
மேட்டூர், 

சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமிக்கு கிடைத்த தகவலின் பேரில் மேட்டூர் வனச்சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனவர் கந்தசாமி, வனக்காப்பாளர்கள் ராஜமாணிக்கம், துரைசாமி, சவுண்டப்பன் மற்றும் வனத்துறையினர் சங்ககிரி குப்பனூர் பைபாஸ் அருகே ஒரு தனியார் தாபா ஓட்டலில் சோதனை நடத்தினர். அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடி சிலர் அதனை தாபா ஓட்டலில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து முயல்களை வேட்டையாடி விற்க முயன்றதாக பெருந்துறையைச் சேர்ந்த சின்னுசாமி (வயது 60), அதை வாங்க வந்த எடப்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து (40), செல்வராஜ் (37), கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி மணி (34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 முயல்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த 4 பேருக்கும் ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்