கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் போராட்டம்

‘கஜா’ புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர் மோடியை கண்டித்து கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.;

Update: 2018-12-30 23:00 GMT
கும்பகோணம்,

தமிழ்நாட்டை இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற்ற வேண்டும். கும்பகோணம் அருகே திருமண்டங்குடி, கோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளின் நிர்வாகிகள் விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடிக்கு வங்கி கடன் வாங்கி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை, வட்டியுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ‘கஜா’ புயல் பாதிப்பை கண்டு கொள்ளாத பிரதமர் மோடியை கண்டித்தும் காந்தி சிலை மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் உருவப்படத்துக்கு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடந்தது.

இதில் சங்கத்தின் கவுரவ தலைவர் தர்மராஜன், மாவட்ட தலைவர் சின்னதுரை, பொருளாளர் மகாலிங்கம், செயலாளர் விமலநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு காந்தி சிலை மற்றும் வல்லபாய் படேலின் உருவப்படத்திடம் கோரிக்கை மனுவை அளித்து கோஷங் களை எழுப்பினர். முன்னதாக கோரிக்கைகளை விளக்கும் விதமாக கும்பகோணம் காந்தி பூங்காவில் இருந்து உச்சிப்பிள்ளையார்கோவில் பகுதியில் உள்ள காந்தி சிலை வரை ஊர்வலமும், இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்