மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி போராட்டம் தஞ்சையில் அய்யாக்கண்ணு பேட்டி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று, தஞ்சையில் அய்யாக்கண்ணு கூறினார்.;
தஞ்சாவூர்,
விளைபொருட்களுக்கு நியாயமான விலை தராமலும், உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் கூட தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டால் தமிழக விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று விட்டு ஓடிவிடுவார்கள் என்று மத்திய- மாநில அரசுகள் நினைத்து செயல்படுகிறது. மரபணு மாற்றம் செய்த உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து எல்லோரையும் சாப்பிட வைத்து மூளையை செயலிழக்க செய்து அடிமைகளாக மாற்றும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
கார்ப்பரேட் கம்பெனிகள் கல் உப்பு வேண்டாம் என்று அயோடின் உப்பில் அலுமினியத்தூள்களை சேர்த்து விற்கிறது. இதனால் 10 வயது உள்ளவர்களுக்கு கூட சர்க்கரை நோய் , ரத்தஅழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மருந்து, மாத்திரைகளை விற்று லாபம் அடைகிறது. விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்ய வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது அடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியமாக ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.