முத்துப்பேட்டை அருகே, டோக்கன் கொடுத்தும் நிவாரண பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி கஜா புயலால் பாதிக்கப்பட்டது. புயலால் வீடுகள், உடமைகள் இழந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2018-12-30 22:30 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி கஜா புயலால் பாதிக்கப்பட்டது. புயலால் வீடுகள், உடமைகள் இழந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கல்லடிக்கொல்லை கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடத்தில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பொருட்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டது. நிவாரண பொருட்கள் வாங்க தண்டாங்கொல்லை, சின்னாங்கொல்லை, கொள்ளக்காடு, அம்பட்டாங்கொல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 143 பேர், புயல் பாதுகாப்பு மையத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு எந்த அதிகாரியும் இல்லை. மேலும், நிவாரண பொருட்களும் இருப்பு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது நிவாரண பொருட்கள் வழங்கி முடிந்து விட்டது. இனிமேல் வழங்கப்படாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பயனாளிகள் நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கல்யாணம் தலைமையில் கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்