பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சாங்காரணை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2018-12-30 22:15 GMT
பெரியபாளையம்,

இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மஞ்சாங்காரணை வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் அருகே ஊர்வலம் முடிவடைந்தவுடன் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு முழுமையாக தடுப்பது குறித்தும், இதற்கு பொதுமக்கள் எவ்வாறு ஆதரவு அளிக்கவேண்டும் என்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.

இதில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஷேக் சதக்கத்துல்லா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மஞ்சை சீனிவாசன், துணை தலைவர் ஜனார்த்தனன், ஊராட்சி செயலாளர் பொன்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்