திருவாரூரில் தீயில் எரிந்து 3 கடைகள் நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
திருவாரூரில் தீயில் எரிந்து 3 கடைகள் நாசமடைந்தன. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேத மடைந்தன.
திருவாரூர்,
திருவாரூர் பழைய ரெயில் நிலையம் அருகே வி.ஆர்.எம். சாலை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இங்கு உள்ள ஒரு பேக்கரி கடை நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த பேக்கரி கடையில் திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகே உள்ள டெய்லர் கடைக்கும், செருப்பு கடைக்கும் பரவியது. ஒரே நேரத்தில் 3 கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 3 கடைகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி கடைகளில் பற்றிய தீயை அணைத்தனர். முன்னதாக பேக்கரி கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் அப்புறப்படுத்தப்பட்டு, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பேக்கரி கடை, டெய்லர் கடை, செருப்பு கடை ஆகிய 3 கடைகளிலும் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.