வாலாஜாபாத் பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாபாத் பேரூராட்சியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-12-30 22:30 GMT
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பேரூராட்சி அலுவலக கட்டிடம், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டு நீண்டகாலமாகிறது. இந்த அலுவலகங்கள் பழுதடைந்து காணப்பட்டது. புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் தமிழக அரசு வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தையும், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தையும், புதிதாக கட்ட அனுமதி வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் உள்கட்டமைப்பு நிதி திட்டம் ரூ.80 லட்சம் செலவில் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடமும், ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ரூ.2 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தாசில்தார் அலுவலக உள்கட்டமைப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், பேரூராட்சி உதவி இயக்குனர் சாந்தகுமார், தாசில்தார் கிரி ராணி, பேரூராட்சி அலுவலர் சுமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்