சின்ன வீராம்பட்டினம், பாரடைஸ் பீச் பகுதிகளில் புத்தாண்டு பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு

புதுவையில் புத்தாண்டு கொண்டாடத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

Update: 2018-12-30 00:09 GMT
அரியாங்குப்பம்,

இந்த நிலையில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, நோணாங்குப்பம், சுண்ணாம்பாறு படகு குழாம் பாரடைஸ் பீச் ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து நேற்று இரவு புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி ஆய்வு செய்தார். அப்போது சின்ன வீராம்பட்டினம், புதுக்குப்பம் மீனவ கிராம பஞ்சாயத்தார்களிடம் ஆலோசனை நடத்தினார்.

அவர்களிடம் கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி கூறும்போது:- புதுவைக்கு புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.நீங்களும் (மீனவர்கள்) போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், சுற்றுலாத்துறை இயக்குனர் மன்சூர் அலி, மேலாண் இயக்குனர் முருகேசன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்