கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாக்பூரில் கடும் குளிர் : 3.5 டிகிரி செல்சியஸ் பதிவானது

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது.

Update: 2018-12-29 23:57 GMT
நாக்பூர்,

நாக்பூர் மாவட்டம் நிப்பாட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மிக குறைவாக 1.8 வெப்பநிலை மட்டுமே பதிவானது.

இந்த நிலையில் நேற்றும் குளிர் வாட்டி வதைத்தது,

குறிப்பாக நாக்பூரில் நேற்று அதிகாலை 3.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது கடந்த 50 ஆண்டுகளில் நாக்பூரில் பதிவான மிக குறைந்த வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான 5 டிகிரி செல்சியஸ் தான் இதற்கு முன் மிக குறைந்த அளவாக இருந்தது.

அப்பகுதியில் மக்கள் கடும் குளிர் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளனா். மேலும் சாலைகளில் ஆங்காங்கே மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்வதை காண முடிந்தது. அருகில் செல்பவர்களை கூட பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. தொடரும் கடும் குளிர் விவசாயிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் நேற்று மாநிலத்தில் மிக குறைந்த அளவாக அகமத் நகர் மாவட்டத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

மேலும் செய்திகள்