வெள்ளைத்திடல் கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளைத்திடல் கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே வெள்ளைத்திடல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே தமிழக அரசு சார்பில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 2005-2006-ம் நிதியாண்டில் கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிக்காமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் சுகாதார வளாகத்தின் பின்புறம் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது என்பதற்காக அனைத்து பேரூராட்சிகளிலும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டி கொடுத்துள்ளது.
இதேபோல் வெள்ளைத்திடல் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 இடங்களிலும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இப்படி சுகாதார வளாகம் பூட்டிக் கிடப்பதால் திறந்த வெளியில் மலம் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே வெள்ளைத்திடல் கிராமத்தில் பராமரிப்பு இன்றி பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.