திருத்தணியில் ஐம்பொன் சிலை மீட்பு; பெண் கைது

திருத்தணியில் ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-29 22:45 GMT
திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அமிர்தாபுரம் பகுதியில் ஐம்பொன் சிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் விற்கும் கடையில் ஐம்பொன்னால் ஆன நந்தி சிலை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

35 கிலோ எடை கொண்ட இந்த சிலையை போலீசார் கைப்பற்றினர். கடை உரிமையாளரான நூர்மா (35) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நூர்மா சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று திருத்தணி போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்