ரூ.16 கோடி ஜி.எஸ்.டி. மோசடி : தனியார் நிறுவன உரிமையாளர் கைது

ரூ.16 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-12-29 00:12 GMT
மும்பை,

மும்பை சயான் பகுதியை சேர்ந்தவர் பூஷன் குமார். தனியார் நிறுவன உரிமையாளர். இந்தநிலையில், இவர் சரக்கு மற்றும் சேவை வரித்துறையில் தாக்கல் செய்த ரசீது மற்றும் ஆவணங்களை சமீபத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது இவர் போலி நிறுவனங்களின் பெயரில் ரசீதுகளை தாக்கல் செய்து ரூ.16 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதேபோல அவர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.30 லட்சம் வங்கிக்கடன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பூஷன் குமாரை சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்