தாராவி குடியிருப்புவாசிகளுக்கு 750 சதுரஅடியில் வீடுகள் கேட்டு போராட்டம்

தாராவி குடியிருப்புவாசிகளுக்கு 750 சதுர அடியில் வீடுகள் கேட்டு போராட்டம் நடந்தது.

Update: 2018-12-29 00:10 GMT
மும்பை,

தாராவி குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாராவியில் குடிசை வீடுகள் படிப்படியாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இதில் சாகுநகர், பாலிகாநகர், மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதி மக்களுக்கு 400 சதுர அடியில் வீடு வழங்குவதாக தாராவி குடிசை மேம்பாட்டு வாரியம் கூறியது. எனினும் அப்பகுதி மக்கள் தங்களுக்கு 750 சதுரஅடியில் வீடுகள் தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாந்திராவில் உள்ள தாராவி மேம்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம் மற்றும் பிரதிநிதிகள் தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி சாகுநகர், பாலிகாநகர், மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதி மக்களுக்கு அதிக சதுர அடியில் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

மேலும் செய்திகள்