சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க மகனை ரூ.10 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக விற்ற பெற்றோர் - நெஞ்சை உலுக்கும் கஜா புயல் சோகம்
சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க மகனை ரூ.10 ஆயிரத்துக்கு கொத்தடிமையாக பெற்றோர் விற்ற நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர்,
கஜா புயலால் சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க பெற்ற மகனை ரூ.10 ஆயிரத்துக்கு பெற்றோர் விற்றனர். அந்த சிறுவன் கொத்தடிமையாக வேலை செய்ததை கண்டுபிடித்து அதிகாரிகள் மீட்டு தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்க வைத்து உள்ளனர்.
நெஞ்சை உலுக்கும் இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வங்க கடலில் உருவான கஜா புயல் கடந்த மாதம் 16-ந் தேதி அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தபோது டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி விட்டு சென்று விட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் மிக கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த புயலால் ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்தன. தென்னை, பலா, மா, தேக்கு உள்பட பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெல், கரும்பு உள்பட பல்வேறு விவசாய பயிர்கள் நாசம் அடைந்தது. தங்களது வாழ்வாதாரமே தொலைந்து போய் விட்டதால் வேதனை தாங்காமல் டெல்டா பகுதி விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர்.
வீடுகளை இழந்த மக்கள் ஆங்காங்கே இருந்த நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அரசின் சார்பில் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இயல்பு வாழ்க்கையை தொலைத்து விட்டு நீண்ட நாட்கள் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தற்போது மெல்ல, மெல்ல மீண்டு வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் புயலால் சேதம் அடைந்த தங்களது வீடுகளை சீரமைக்க அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் தாங்களே சீரமைத்து கொண்டனர். அதே நேரத்தில் நிரந்தர வருவாய் ஏதும் இல்லாத ஏழைகள், சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இத்தகைய நிலையில் உள்ள ஒரு ஏழை கூலி தொழிலாளி தம்பதியினர், கஜா புயலால் சேதம் அடைந்த தனது வீட்டை சீரமைக்க தாங்கள் பெற்ற மகனையே ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்த சம்பவம் நடந்து உள்ளது. கொடுமையிலும் கொடுமை, வறுமை என்பார்கள். அத்தகையை வறுமையை போக்குவதற்காக தங்கள் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு தங்கள் மகனை விற்ற பெற்றோர், தங்களுக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 45). இவரது மனைவி வசந்தா(41). இருவரும் தினக்கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு சக்தி(25) மற்றும் 12 வயது நிரம்பிய மகன் என்று இரண்டு மகன்களும், காமாட்சி(10) என்ற மகளும் உள்ளனர்.
நாள்தோறும் காலையில் கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று மாலையில் வீட்டுக்கு திரும்பி வருவார்கள். அதன்பின்னர்தான் இவர்கள் வீட்டில் அடுப்பே எரியும். அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கே இவர்களுக்கு போதும்... போதும்... என்று இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி இவர்களது வாழ்க்கையை புரட்டி போட்டது கஜா புயல்.
பெரிய, பெரிய மரங்களை வேரோடு பிடுங்கி போட்ட கஜா புயலுக்கு இவர்களது குடிசை வீடு எம்மாத்திரம். சுழன்று அடித்த புயல் இவர்களது குடிசை வீட்டை முற்றிலும் உருக்குலைத்து விட்டு சென்று விட்டது. இதனைத்தொடர்ந்து நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கி இருந்த மாரிமுத்துவுக்கு புயலுக்கு பின்னர் கூலி வேலையும் சரிவர கிடைக்கவில்லை. இருந்த ஒரே வாழ்வாதாரமான குடிசையையும் இழந்து விட்டு, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு மாரிமுத்து-வசந்தா தம்பதியினர் வறுமையில் வாடி வந்தனர்.
தங்களது குடிசையை சீரமைப்பதற்காக அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த பணத்தை புரட்டுவதற்கு அவர்களிடம் பொட்டு தங்கமோ, வேறு எதுவுமோ இல்லை. யாரிடம் சென்று உதவி கேட்பது? தங்களது குடிசையை எப்படி சீரமைப்பது என்று தம்பதியினர் மிகுந்த வேதனையில் வாடினர். அப்போது அவர்கள் இருவரும் கலந்து பேசி தங்களிடம் இருக்கும் ஒரே சொத்தான தங்கள் இரண்டாவது மகனை தற்காலிகமாக விற்று குடிசையை சீரமைப்பது என்று முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது 12 வயது மகனை ரூ.10 ஆயிரத்துக்கு நாகை மாவட்டம் பனங்குடியை அடுத்த சன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த பண்ணை தோட்ட உரிமையாளர் சந்துரு என்பவரிடம் விற்று உள்ளனர். அவர் அந்த சிறுவனை விலைக்கு வாங்கி தனது பண்ணை தோட்டத்தில் வேலைக்கு ஈடுபடுத்தினார். கொத்தடிமை போல் அந்த சிறுவன் வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிகிறது. தோட்டத்து வேலைகளில் மட்டுமல்லாது ஆடு மேய்க்கும் வேலையிலும் அவன் ஈடுபடுத்தப்பட்டான்.
இந்த நிலையில் அந்த சிறுவனை கொத்தடிமை போல் வேலையில் ஈடுபடுத்தப்படுவதை பார்த்தவர்கள், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் கடந்த 22-ந் தேதி அரசு அதிகாரிகளும், சைல்டு லைன் அமைப்பை சேர்ந்தவர்களும் அந்த பண்ணை தோட்டத்துக்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது 12 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனை மீட்டு நாகை உதவி கலெக்டர் கமல் கிஷோரிடம் அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுவனிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கஜா புயலால் சேதம் அடைந்த தங்களது குடிசையை சீரமைப்பதற்காக தனது பெற்றோரே தன்னை ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக சிறுவன் கூறினான்.
இதற்கிடையில் சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உதவி கலெக்டர் கமல்கிஷோர், போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து நாகூர் போலீசார், சந்துரு மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்து உள்ளனர். இந்த கொடுமையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டை சீரமைக்க வேறு வழியில்லாததால் மகனை ரூ.10 ஆயிரத்துக்கு விற்றேன் - தந்தை பேட்டி
இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை அண்ணா குடியிருப்பை சேர்ந்த மாரிமுத்துவிடம் பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது அவர் கூறியதாவது:-
எனக்கு ரேஷன் கார்டோ, ஆதார் கார்டோ எதுவும் கிடையாது. இதனால் எனக்கு அரசின் சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. கஜா புயலால் எனது குடிசை முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. அரசு சார்பில் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. வீடு இல்லாததால் பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகுந்த சிரமப்பட்டு வந்தேன். சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க எனக்கு வேறு வழியில்லாததால் எனது 12 வயது மகனை ரூ.10 ஆயிரத்துக்கு நாகையை அடுத்த பனங்குடியை அடுத்த சன்னமங்கலத்தை சேர்ந்த சந்துருவிடம் விற்றேன் என்றார்.
மாரிமுத்து தனது மூத்த மகன் சக்தியை, இதே சந்துருவிடம், ரூ.1 லட்சம் வாங்கிக்கொண்டு ஆடு மேய்க்கும் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு கொத்தடிமையாக வேலை செய்து வந்த சக்திக்கு கஜா புயல் தாக்கிய அன்று காலையில்தான் திருமணம் நடந்து உள்ளது. தன்னிடம் வாங்கிய பணத்திற்கு சக்திக்கு பதிலாக அவரது தம்பியான 12 வயது சிறுவனை ஆடு மேய்க்கும் வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சந்துரு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கிடையில் கஜா புயல் தாக்கியதில் சேதம் அடைந்த குடிசையை சீரமைக்க வேறு வழி தெரியாததால் தனது இளைய மகனை, சந்துருவிடம் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார் மாரிமுத்து.