பொங்கல் போனஸ் வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் நடந்தது
பொங்கல் போனஸ் வழங்கக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், நிர்வாகி சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்களில் ஏ மற்றும் பி பிரிவினர் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் போனஸ் கடந்த ஆண்டு அரசு ரத்து செய்தது. எனவே ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதம் ஊதியத்தை உச்சவரம்பின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.