செங்கல்பட்டில் இடிந்து விழும் நிலையில் மீன் சந்தை கட்டிடம் சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை
செங்கல்பட்டில் இடிந்து விழும் நிலையில் மீன் சந்தை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சியின் கட்டுப்பாட்டில் பழைய பஸ்நிலையம் அருகே மேட்டத் தெருவில் மீன்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த மீன் சந்தை கட்டிடம் 43 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இந்த மீன் சந்தையில் கழிவுகள் தேங்கியுள்ளதால், வியாபாரிகளுக்கும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
இந்த சந்தைக்கென எந்த ஒரு பாதுகாப்போ, தண்ணீர் வசதியோ, கழிவறை வசதியோ செய்து தரப்படவில்லை என்பது ஒட்டுமொத்த வியாபாரிகளின் வேதனையாக உள்ளது. இரவு நேரங்களில் வியாபாரிகளின் மீன்கள் திருட்டு போவதாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் மீன் வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மீன் சந்தையை சுற்றியுள்ள வீடுகளுக்கும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு வசித்து வரக் கூடியவர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்த படியே வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் செங்கல்பட்டு மீன் சந்தை வியாபாரிகளை பற்றியோ, சீரழிந்து வரும் மீன் சந்தை வளாகத்தை பற்றியோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் வரிவசூல் மட்டும் முறையாக நடக்கிறது. எனவே இந்த பழமை வாய்ந்த மீன் சந்தை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே மீன் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.