தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்க உள்ள ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தகவல்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடத்தப்பட உள்ள ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார் என வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடத்தப்பட உள்ள ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார் என வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
ஊராட்சி சபை கூட்டம்
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கையும், ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் நேரில் எடுத்து சொல்லும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திட வேண்டும் எனதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 204 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமை கழகம் சார்பில் கனிமொழி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, ஆஸ்டின் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதல்கட்டமாக...
முதல்கட்டமாக வருகிற ஜனவரி 8–ந்தேதி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குறுக்குசாலை, கீழமுடிமன், பசுவந்தனை, எப்போதும் வென்றான் ஆகிய ஊராட்சிகளிலும், 9–ந்தேதி புதூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வெம்பூர், மாவில்பட்டி, அயன்கரிசல்குளம், சென்னமரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், 10–ந்தேதி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குளத்தூர், மேல்மாந்தை, சூரங்குடி, வேம்பார்– வேம்பார் தெற்கு ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடக்கும் ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்கிறார். எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.