ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலைநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக ஊத்துமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் ரெட்டியார்பட்டி சந்தை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேஷ் (வயது 31) என்பதும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
நோய்வெங்கடேசுக்கு மூல நோய் இருந்து வந்தது. இதனால் இவர் புளியங்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த வெங்கடேஷ், சேர்ந்தமரம் பகுதியில் உள்ள ஒரு காற்றாலை மின்சார வயரை பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவருடைய உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.