தஞ்சையில் குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் 6 மாவட்டங்களை சேர்ந்த 250 பேர் பங்கேற்பு

தஞ்சையில் குழந்தைகள் இல்ல மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் 6 மாவட்டங்களை சேர்ந்த 250 பேர் கலந்து கொண்டனர்.;

Update: 2018-12-27 22:15 GMT
தஞ்சாவூர்,

சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர், சிறுமிகளுக்கான குழந்தைகள் இல்லங்களில் ஆதரவற்ற, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

போட்டிகளை தஞ்சை இளைஞர் நீதி குழும முதன்மை நடுவர் தங்கமணி தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் கபடி, வாலிபால், தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட விளையாட்டு அதிகாரி பாபு, காரைக்குடி சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப் பாளர் பிரபாகரன், தஞ்சை மண்டல அதிகாரி கஸ்தூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்