செங்கல்பட்டில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் செல்வதற்கு முன்பு ஒரு மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் ஏற்கனவே ஒரு மதுக்கடை உள்ளது.
செங்கல்பட்டு,
இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.