நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் இன்று நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
நெல்லை மாவட்டத்தில் 5–வது கட்டமாக அம்மா திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) 12 தாலுகாக்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.
நெல்லை தாலுகாவில் நரசிங்கநல்லூர், ராதாபுரம் தாலுகாவில் பரிவிரி சூரியன், அம்பை தாலுகாவில் ஜமீன் சிங்கம்பட்டி பகுதி –2, நாங்குநேரி தாலுகாவில் திருக்குறுங்குடி பகுதி –1, சேரன்மாதேவி தாலுகாவில் பாப்பாக்குடி பகுதி –2, பாளையங்கோட்டை தாலுகாவில் நொச்சிகுளம், பற்பகுளம் ஆகிய ஊர்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
சங்கரன்கோவில் தாலுகாவில் கோ.மருதப்பபுரம், திருவேங்கடம் தாலுகாவில் குளக்கட்டாகுறிச்சி, வீரகேரளம்புதூர் தாலுகாவில் முத்தம்மாள்புரம், ஆலங்குளம் தாலுகாவில் கழுநீர்குளம், கடையநல்லூர் தாலுகாவில் சாம்பவர் வடகரை, திசையன்விளை தாலுகாவில் கோவன்குளம் ஆகிய ஊர்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் இலவச வீட்ட மனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகைக்கான மறுபரிசீலனை விண்ணப்பம் மற்றும் பொது கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுத்து பொது மக்கள் பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.