சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

பேரளம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-12-26 22:00 GMT
நன்னிலம்,

பேரளம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டு ஜெயராஜ் ஆகியோர் நாடாகுடி, கொல்லுமாங்குடி, தண்டந்தோப்பு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாடாகுடி மெயின்ரோட்டில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 54) என்பதும், புதுச்சேரி மாநில சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல கொல்லுமாங்குடி மெயின்ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வம் (50), தண்டந்தோப்பு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (39) மற்றும் லெட்சுமி (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்