காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் ஆணவக்கொலை: மனைவியின் அண்ணன் உள்பட 3 பேர் கைது
என்ஜினீயரிங் மாணவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மனைவியின் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
பீட் பகுதியை சேர்ந்தவர் சுமித் வாக்மாரே(வயது25). இவர் அங்குள்ள ஆதித்யா பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு, அந்த கல்லூரியில் படித்து வரும் பாக்யஸ்ரீ என்ற மாணவியுடன் காதல் மலர்ந்தது.
இதை அறிந்த மாணவியின் பெற்றோர் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி பாக்யஸ்ரீ, சுமித் வாக்மாரே இருவரும் கரம் பிடித்தனர்.
திருமணத்திற்கு பிறகும் அவர்கள் தொடர்ந்து படித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சுமித் வாக்மாரேவும், அவரது மனைவியும் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினர்.
பின்னர் தேர்வு முடிந்து இருவரும் கல்லூரியில் இருந்து வெளியே வந்தபோது, மாணவி பாக்யஸ்ரீ யின் அண்ணன் பாலாஜி லாண்டே, தனது கூட்டாளியுடன் அங்கு வந்தார். அவர் சுமித் வாக்மாரேவை மனைவியின் கண்முன்பே சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ஆணவக்கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார், பாக்யஸ்ரீ யின் அண்ணன் பாலாஜி லாண்டே மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அமராவதி மாவட்டத்தில் பாலாஜி லாண்டே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், நேற்று முன்தினம் அங்குள்ள பட்னேரா ரெயில் நிலையத்தில் வைத்து பாலாஜி லாண்டே மற்றும் அவரது கூட்டாளி சன்கேத் வாகே ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவர்கள் தப்பி செல்ல உதவிய காஜானன் கிஷிசாகர் என்பவரும் கைதா னார். 3 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீசார் தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.