கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த என்ஜினீயர் சாவு

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், படுகாயமடைந்த என்ஜினீயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2018-12-25 22:00 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சந்தோஷ்குமார்(வயது 21). இவரது உறவினரான இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோடி மகன் அஜய். இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்றனர். அப்போது இறையூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் இறங்கும் போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு கார் வலது புறமாக திரும்பியது.

அப்போது எதிர்பாராதவிதமாக, சந்தோஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் காரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் சந்தோஷ்குமார், அஜய் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை அஜய் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சந்தோஷ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்